ஓரங்கப்பட்ட ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் இடம்!

Published : Jan 09, 2023, 12:38 PM IST
ஓரங்கப்பட்ட ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் இடம்!

சுருக்கம்

ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவான் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் அறிமுகமானார். தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த 9ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்துள்ளார்.

IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடத்தை இழக்கும் சீனியர் வீரர்..! உத்தேச ஆடும் லெவன்

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார். இதுவே அவரது கடைசி ஒரு நாள் போட்டி. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ஷிகர் தவான் இடம் பெறவில்லை.

சூர்யகுமார் மட்டும் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், காணாமல் போயிருப்பார்..! PCB-க்கு குட்டு வைத்த சல்மான் பட்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில், ஷிகர் தவான் இடம் பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஷிகர் தவான் பங்கேற்றுள்ள 33 போட்டிகளில் 1275 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் 2ஆவது இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

ஷிகர் தவான் - 1275 ரன்கள் (33 ஒரு நாள் போட்டி)
ஷ்ரேயாஸ் ஐயர் - 1061 ரன்கள் (25 ஒரு நாள் போட்டி)
கே எல் ராகுல் - 871 ரன்கள் (21 ஒரு நாள் போட்டி)
விராட் கோலி - 862 ரன்கள் (23 ஒரு நாள் போட்டி)
சுப்மன் கில் - 671 ரன்கள் (13 ஒரு நாள் போட்டி)
ரிஷப் பண்ட் - 519 ரன்கள் (13 ஒரு நாள் போட்டி)
ரோகித் சர்மா - 510 ரன்கள் (14 ஒரு நாள் போட்டி)

சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?