ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

Published : Mar 29, 2023, 12:09 PM IST
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

சுருக்கம்

ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 15ஆவது ஐபிஎல் சீசனில் மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இதே போன்று தான் சென்னை அணியும் நிலையும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. இதனால், இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த அணிகளுக்கு வாய்ப்பு ரொம்பவே அதிகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே ரிச்சர்ட்சனும் மும்பை அணியிலிருந்து விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், அர்ஜூன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், குமார் கார்த்திகேயா சிங், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பியூஸ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஷாம்ஸ் முலானி, ஜேஷன் பெஹ்ரெண்டாஃர்ப், நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ராகவ் கோயல், டுயன் ஜான்சென்.

மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா சிங், ஹிருத்திக் ஷோகீன் 

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்த உடன உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 9 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை அணியிலேயே இடம் பெறுவார் என்றும், அவர் டிரெஸ்ஸிங் ரூமில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, அவர் தான் அணியை வழி நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

IPL 2023: பும்ரா இல்லை, 6ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகுமா? பலம் என்ன, பலவீனம் என்ன?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!