கோலி ஃபார்ம் பற்றி கேட்ட நிருபர்.. கடுப்பான ரோஹித்..! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Jul 15, 2022, 6:15 PM IST
Highlights

விராட் கோலி குறித்த தொடர் கேள்விகளால் அதிருப்தியடைந்த கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு பின், நிருபர் கோலி குறித்து மீண்டும் கேட்டதால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்தார். 
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

சதம் அடிக்கவில்லை என்றாலும், நன்றாக ஆடி அரைசதம், 70-80 ரன்களாவது அடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஓராண்டாக அதுவும் அடிக்காமல், மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார்.

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங்.. ரீஸ் டாப்ளி வரலாற்று சாதனை

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செம கெத்தாக வலம்வந்த விராட் கோலி, இன்றைக்கு கூனிக்குருகி இருக்கிறார். பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். கிரிக்கெட் தெரிந்தவர், தெரியாதவரெல்லாம் ஆலோசனை வழங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார் கோலி.

விராட் கோலிக்கு எதிராக எவ்வளவு கருத்துகள் எழுந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு ஆதரவாக இருக்கிறார். விராட் கோலிக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார் ரோஹித்.

இதையும் படிங்க - ENG vs IND: கோலியின் ஸ்கோரை மிக துல்லியமாக முன்கூட்டியே கணித்த ரசிகர்..! ஆச்சரியம்.. ஆனால் உண்மை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயத்தால் ஆடாத விராட் கோலி, 2வது ஒருநாள் போட்டியில் ஆடினார். அவர் மீது வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி நன்றாக தொடங்கிய விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

கோலி மீண்டுமொரு முறை ஏமாற்றமளிக்க, போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதே கேள்வியை தொடர்ந்து எதிர்கொண்டுவருவதால் ரோஹித் சர்மா செம கடுப்பானார். ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்கிறீர்கள் என்று அதிருப்தியை தெரிவித்த ரோஹித் சர்மா, கோலி பல ஆண்டுகளாக ஆடிவருகிறார். நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறார். நான் ஏற்கனவேவும் சொல்லியிருக்கிறேன். எந்தவொரு வீரருக்கும் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த கோலிக்கு அவரது ஃபார்மை திரும்ப பெற 2 நல்ல இன்னிங்ஸ் போதும் என்றார் ரோஹித்.
 

Rohit was yet again asked on Virat. And I am glad he said what he has. Good to see the captain back his top man. pic.twitter.com/OBtd4JHOFE

— Boria Majumdar (@BoriaMajumdar)
click me!