மனைவி ரித்திகா, மகள் சமைரா ஆகியோருடன் இணைந்து ரோகித் சர்மா ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று ஒருவரையொருவர் வண்ணங்களை பூசியும், இனிப்புகளை ஊட்டியும் கொண்டாடுவார்கள்.
ஹோலிக்கு ஒரு நாள் முன்னதாக ஹோலிகா தஹான் என்ற மத சடங்கைச் செய்து புனித நெருப்புடன் விழாபை தொடங்குவார்கள். அது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. அடுத்த நாள், மக்கள் தங்கள் அன்பானவர்களுடன் ஹோலியை வண்ணங்களுடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, ரித்திகா சஜ்டே, சமைரா ஆகியோர் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், ரோகித் சர்மா ஒரு படி மேல் சென்று சிறு குழந்தையைப் போன்று ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். தண்ணீரில் சறுக்கி விளையாடுவது, மகள் சமைராவுடன் இணைந்து ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெற்றியோடு க ளமிறங்கும் பஞ்சாப் – கோட்டையில் வாகை சூடுமா பெங்களூரு? டாஸ் ஜெயிச்சு பவுலிங்!
நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 5ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மா 43 ரன்களும், பிரேவிஸ் 46 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை 6 ரன்களில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024 முழு அட்டவணை வெளியீடு – அகமதாபாத்தில் எலிமினேட்டர், சேப்பாக்கத்தில் ஃபைனல் கன்பார்ம்!