பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், முகமது ஷமியும் இடம் பெறவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். முதல் ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். இந்த ஓவரில் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் ஷஹீனுக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றார்.
RSA vs AUS: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
2ஆவது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரை சுப்மன் கில் எதிர்கொண்டார். முதல் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாஹீன் அஃப்ரிடியால் பிடிக்க முடியவில்லை. இதே போன்று ஸ்லிப் பகுதியில் அடித்த வாய்ப்பையும் யாரும் பிடிக்கவில்லை. இப்படி சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் பாகிஸ்தான் வீரர்கள் கோட்டைவிடவே அதிரடியாக மாறி மாறி பவுண்டரியாக அடித்தார்.
வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!
வெறும் 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார். சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார்.
இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
இதே போன்று விராட் கோலி இந்தப் போட்டியில் 98 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனையை அவர் 277 ஒரு நாள் போட்டிகளில் படைக்க உள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் 300 ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார்.