வங்கதேச அணிக்கு எதிரான 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். தற்போது வரையில் 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2 ஆவது இடத்திலும், நியூசிலாந்து விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று நம்பர் 1 இடத்திலும் உள்ளன.
உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?
இலங்கை விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு புனே மைதானத்தில் நடக்க இருக்கிறது.
New Zealand vs Afghanistan: அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் சாண்ட்னர் நம்பர் 1 இடம்!
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா தான் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு முறை வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
அதன் பிறகு நடந்த 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் முறையே 87, 109 மற்றும் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதில், 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ரோகித் சர்மா முறையே 137 ரன்கள் மற்றும் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார்.
NZ vs AFG: 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் – புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம்!
இதே போன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியிலும் வங்கதேச அணிக்கு எதிராக ரோகித் சர்மா 123 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 5ஆவது முறையாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
215 கிமீ வேகத்தில் பறந்த ரோகித் சர்மா – 3 முறை வேகத்தை அளக்கும் கருவியில் சிக்கி அபராதம் விதிப்பு!
இதுவரையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஒரு நாள் போட்டிகளில் 40 முறை மோதியுள்ளன. இதில், 31 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவும், 8 ஒரு நாள் போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 265 ரன்கள் குவித்தது. இதில், வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவ்ஹீத் ஹிரிடோய் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி 121 ரன்கள் குவித்தார். கடைசி வரை போராடிய அக்ஷர் படேல் 42 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியின் போது அக்ஷர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.