இலங்கைக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியிலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இலங்கை அணியில் முதல் ஓவரை தில்ஷன் மதுஷங்கா வீசினார்.
இந்த ஓவரில் முதல் பந்தில் ரோகித் சர்மா பவுண்டரி விளாசினார். 2ஆவது பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்து வளர்ந்த ரோகித் சர்மா தனது சொந்த மண்ணில் அதுவும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தப் போட்டியை பார்க்க வந்துள்ளார்.
இந்தியா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும் – டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு!
நேற்று சச்சின் டெண்டுல்கரின் 50 ஆண்டுகால வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, என்சிபி தலைவரும் முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவருமான சரத் பவார், மும்பை கிரிக்கெட் சங்கம் தலைவர் அமோல் காலே ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கரின் இந்த சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கருக்கு சிறிய அளவிலான அவரது முழு உருவச் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 4 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு இந்திய வீரராக ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் 402 ரன்கள் குவித்துள்ளார்.
NZ vs SA: இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வி!