இந்தியாவிற்கு எதிரான 33ஆவது உலகக் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கான முக்கியமான போட்டியாக கருதப்படும் 33ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனன் ஜெயா டி சில்வா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா அணியிம் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, துஷான் ஹேமந்தா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜீதா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா.
NZ vs SA: இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வி!
இந்தியா விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தியா இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால், இலங்கை விளையாடிய 6 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். எனினும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து தான் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் இதுவரையில் 9 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 4 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக நடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதே போன்று இரு அணிகளும் 167 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக 98 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று 57 ஒரு நாள் போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது.