வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
ஒருநாள் தொடரின்போது கை கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டார். கேஎல் ராகுல் முதல் டெஸ்ட்டில் கேப்டன்சி செய்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஃபாஸ்ட் பவுலர் ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். காயம் காரணமாக அவர்கள் ஆடாததால் ஜெய்தேவ் உனாத்கத், நவ்தீப் சைனி, சௌரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு முதல் டெஸ்ட்டில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் 2வது டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ரோஹித் சர்மா 2வது டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கை கட்டை விரல் காயம் சரியாகாததால் அவர் 2வது டெஸ்ட்டிலிருந்தும் விலகியுள்ளார். ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி அடிவயிற்றில் தசைப்பிடிப்பு காரணமாக அவரும் விலகியுள்ளார்.
2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் காயம் காரணமாக 2வது டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளனர். நவ்தீப் சைனியே மாற்று வீரர் தான் என்பதால் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. போதுமான ஃபாஸ்ட்பவுலர்கள் அணியில் உள்ளனர்.
IPL 2023: ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர்கள்
இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனாத்கத்.