முதல் முறையாக ஒயிட் வாஷான பாகிஸ்தான், இதுல மோசமான சாதனை வேறு!

By Rsiva kumarFirst Published Dec 20, 2022, 2:22 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டியையும் இழந்து ஒயிட் வாஷ் ஆகியுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றிய நிலையில் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது.

தம்பி இது டெஸ்ட் போட்டி, டி20 இல்ல - காட்டு காட்டுன்னு காட்டிய சூர்யகுமார் யாதவ்!

இங்கிலாந்து:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஆலி ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச்.

அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 78 ரன்களும், அகா சல்மான் 56 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 354 ரன்கள் சேர்த்தது. இதில், ஹாரி ப்ரூக் 111 ரன்களும், பென் ஃபோக்ஸ் ஆகியோர் அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, 54 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 216 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 54 ரன்களும், சௌத் ஷகீல் 53 ரன்களும் சேர்த்தனர். பின்னர் எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 28.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆக்கியுள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 82 ரன்கள் சேர்த்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் இளம் அறிமுக வீரர் ரெஹான் அகமது, தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். 

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதல் முறையாக சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

புதிய வரலாற்று சாதனை படைத்த 18 வயதே நிரம்பிய ரெஹான் அகமது!

click me!