2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!

By Rsiva kumarFirst Published Jan 18, 2023, 12:50 PM IST
Highlights

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் இன்னும் 2 வாரங்களில் வீடு திரும்புவார் என்றும், அவர் விளையாடுவதற்கு 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
 

கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திருமணம் நிச்சயமாயிருச்சு, தேதி தான் குறிக்கல: அக்‌ஷர் படேல் - மேகா திருமணம் எப்போது?

இதையடுத்து, தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், தனக்கு ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும், பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் அரசு அதிகாரிகளுக்கும், அவர்களது ஆதரவிற்கும் நன்றி என்று ரிஷப் பண்ட் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் என்னால் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த 2 ஹீரோக்களையும் நான் பாராட்டியாக வேண்டும். அவர்கள் மூலமாக நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு சென்றேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகியோருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.

முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கே எல் ராகுல் வீடு!

இந்த நிலையில், ரிஷப் பண்ட் எப்போது வீடு திரும்புவார், மறுபடியும் எப்போது விளையாடுவார் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். இன்னும் 2 மாதங்களுக்குள்ளாக அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்யலாம். தசைநார்களில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், காயம் அடைந்த தசைநார்கள் இயற்கையாகவே குணமடைகிறதா? இல்லையா என்பதை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

SA20: அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

India Open Badminton 2023: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..! தொடரை விட்டு வெளியேறினார்

click me!