நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ. அந்த வீரர்கள் ஒருநாள் உலக கோப்பைக்கு முன் நடக்கும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர்.
வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக கடைசியாக 2 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி 18) ஹைதராபாத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் இடம்பெறவில்லை. 4ம் வரிசை வீரரான ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எனவே இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்குமே ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இஷான் கிஷனும் ஆடுவதால், ரோஹித்துடன் ஷுப்மன் கில் - இஷான் கிஷன் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்ற கேள்வி இருந்தது. ஷுப்மன் கில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடியிருப்பதால், அவரே தொடக்க வீரராக இறங்குவார். ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 4ம் வரிசையில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதை உறுதி செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் தான் பேட்டிங் ஆடுவார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதனை படைத்த இஷான் கிஷனை ஓபனிங்கில் இருந்து பின் தள்ளி மிடில் ஆர்டரில் இறக்குவது கடினமான முடிவுதான் என்றாலும், ஷுப்மன் கில் ஓபனிங் ஸ்லாட்டை பிடித்துவிட்டார் என்பதால் அதை மாற்றவேண்டாம் என்ற காரணத்திற்காக இஷான் இஷன் மிடில் ஆர்டரில் இறக்கப்படுகிறார்.