நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ. அந்த வீரர்கள் ஒருநாள் உலக கோப்பைக்கு முன் நடக்கும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர்.
வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக கடைசியாக 2 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. நாளை(ஜனவரி 18) ஹைதராபாத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!
இந்த தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் இடம்பெறவில்லை. 4ம் வரிசை வீரரான ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்வது இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்கும்.
ரோஹித் சர்மாவுடன் இலங்கைக்கு எதிரான தொடரில் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கினார். எனவே இந்த தொடரிலும் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்குவார். விராட் கோலி 3ம் வரிசையில் ஆடுவார். விக்கெட் கீப்பராக இறங்கும் இஷான் கிஷன் 4ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். அவரைத் தொடக்க வீரராக இறக்கலாம். ஆனால் ஷுப்மன் கில் ஓபனிங்கில் சிறப்பாக ஆடியிருப்பதாலும் நிலையான தொடக்கத்தை அமைத்து கொடுத்திருப்பதாலும் அவரே தொடக்க வீரராக இறங்குவார். ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகிய இருவருமே இல்லாததால், இஷான் கிஷன் 4ம் வரிசையிலும், சூர்யகுமார் யாதவ் 5ம் வரிசையிலும் ஆடுவார்கள்.
ஹர்திக் பாண்டியா 6ம் வரிசையில் இறங்குவார். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.