ரஞ்சி தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார் சர்ஃபராஸ் கான். மும்பை அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், சர்ஃபராஸ் கானே 125 ரன்களை குவித்தார்.
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்த சர்ஃபராஸ் கான்,
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
ரஞ்சி தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 125 ரன்கள் சர்ஃபராஸ் கான் அடித்தது. அபாரமாக பேட்டிங் ஆடி முதல் தர கிரிக்கெட்டில் தனது 13வது சதத்தை விளாசினார் சர்ஃபராஸ் கான். 37வது ரஞ்சி போட்டியில் 13வது சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார்.
IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!
ரஞ்சி தொடரில் சதங்களாக விளாசிவரும் சர்ஃபராஸ் கானை இனியும் இந்திய அணி தேர்வாளர்களும், நிர்வாகமும் புறக்கணிக்க முடியாது. ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் இடம்பெற வாய்ப்புள்ளது.