தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரின் 10 ஆவது போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்திலும், 11ஆவது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், நேற்று நடந்த 10ஆவது போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் விஹான் லுப்பே அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் மில்லர் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை விரட்டிய டர்பர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் வழக்கம் போல் ஹென்றிச் கிளாசன் அதிரடி காட்ட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது.
undefined
முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கே எல் ராகுல் வீடு!
இதையடுத்து நடந்த 11ஆவது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஹென்றிக்ஸ் மற்றும் டூபிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது. டூபிளசிஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்றிக்ஸ் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவர் 45 பந்துகளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லூயிஸ் டு ப்ளூய் காட்டடி காட்ட ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. இதில், லூயிஸ் 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
India Open Badminton 2023: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..! தொடரை விட்டு வெளியேறினார்
இதைத் தொடர்ந்து 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி ஆடியது. அந்த அணியில் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IND vs NZ: இஷான் கிஷனுக்கு புதிய பேட்டிங் ஆர்டர்.. உறுதிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா
இன்று நடக்கும் 12 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதுகின்றன. 13 ஆவது போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.