ரிஷப் பண்ட்டுக்கு வெற்றிகரமாக நடந்த முழங்கால் அறுவை சிகிச்சை..!

By karthikeyan VFirst Published Jan 7, 2023, 4:11 PM IST
Highlights

கார் விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்டுக்கு மும்பை மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 
 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி - டேராடூன் சாலையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றபோது, சாலை தடுப்பில் மோதி கடந்த டிசம்பர் 30ம் தேதி விபத்துக்குள்ளானது. கார் வேகமாக தடுப்பில் மோதி பலமுறை சுழன்றுவிழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்பாக ரிஷப் பண்ட் கார் ஜன்னலை உடைத்து சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு அடிப்படையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மூளை மற்றும் முதுகுத்தண்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ரிஷப் பண்ட்டுக்கு முதுகுத்தண்டு மற்றும் மூளையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது.

ஜெய் ஷா மீது பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் குற்றச்சாட்டு! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு, மும்பையில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

IND vs SL: தம்பி நீ பண்ண வரைக்கும் போதும்.. கொஞ்சம் உட்காரு..! 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

மும்பை தனியார் மருத்துவமனையில் புகழ்பெற்றர் எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்ட்டுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பிசிசிஐ மருத்துவக்குழுவும் ரிஷப் பண்ட்டின் அறுவை சிகிச்சையை கண்காணித்தது. நேற்று 3-4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமடைய சில மாதங்கள் ஆகும்.
 

click me!