புதிய புதிய ஷாட்டுகளை அடிக்கிறாரே! சூர்யகுமார் யாதவ்விற்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு!

By Rsiva kumarFirst Published Jan 28, 2023, 7:22 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ்வின் புதுமையான ஷாட்டுகளை கண்டு வியந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் கான்வே (52), மிட்செல் (59 நாட் அவுட்) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இஷான் கிஷான் (4), ராகுல் திரிபாதி (0), சுப்மன் கில் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!

இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து ஓரளவு சேர்த்தனர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஹர்திக் பாண்டியா 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சிறந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டர் சுந்தர் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி20 கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 47 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ்வை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதுமையான ஷாட்டுகளை அடிக்கும் விதமாக இருக்கட்டும், அவரது திறமையாக இருக்கட்டும் கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு விளையாட்டு வீரரை நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தரின் போராட்ட அரைசதம் வீண்.. முதல் டி20யில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை 1-1 என்று சமன் செய்யும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி 2-0 என்று தொடரை கைப்பற்றும்.

click me!