ஹர்திக் பாண்டியா ஸ்மார்ட்டான கேப்டன் இல்ல.. குறிப்பாக அந்த விஷயத்தில் கோட்டைவிட்டார்..! கனேரியா விமர்சனம்

By karthikeyan V  |  First Published Jan 28, 2023, 7:15 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், அவரது கேப்டன்சியை பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
 


2022ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. அதன்பின்னர் நடந்த வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்தார். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அந்த 2 டி20 தொடர்களையும் இந்திய அணி வென்றது.

எனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக இனி ஹர்திக் பாண்டியா தான் செயல்படுவார் என தெரிகிறது. ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்சியும் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

Tap to resize

Latest Videos

வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிறகு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 176 ரன்கள் அடித்தது. 177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் (50) மற்றும் சூர்யகுமார் யாதவ்(47) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் சரியாக ஆடாததால் 155 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அதிருப்தியடைந்த டேனிஷ் கனேரியா அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, ஹர்திக் பாண்டியா ஸ்மார்ட்டான கேப்டன் கிடையாது. பவுலர்களை ஹர்திக் பாண்டியாவிற்கு சரியாக ரொடேட் செய்ய தெரியவில்லை. ஷிவம் மாவியை மிக தாமதமாக பந்துவீச அழைத்து வந்தார். அவரை முன்கூட்டியே பந்துவீச வைத்திருக்க வேண்டும். பந்து நன்றாக திரும்பியதால், தீபக் ஹூடாவையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த விஷயத்தில் தான் வியூக ரீதியாக கோட்டைவிட்டு விட்டார். அவரிடம் எந்த திட்டமுமே இருக்கவில்லை என்று டேனிஷ் கனேரியா விமர்சித்தார்.
 

click me!