BBL: டி20யில் தனது கெரியர் பெஸ்ட் இன்னிங்ஸை ஆடிய அஷ்டான் டர்னர்! சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபைனலில் பெர்த் அணி

By karthikeyan VFirst Published Jan 28, 2023, 5:47 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அஷ்டான் டர்னரின் அபாரமான பேட்டிங்கால் சிட்னி சிக்ஸர்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. ஃபைனலுக்கு முன்னேறுவதற்கான குவாலிஃபயர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் மோதின. பெர்த்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், குர்டிஸ் பாட்டர்சன், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், ஹைடன் கெர், டேனியல் கிறிஸ்டியன், பென் துவர்ஷுயிஸ், சீன் அபாட், ஸ்டீவ் ஓ கீஃப், இஸாருல்ஹக் நவீத்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

கேமரூன் பான்கிராஃப்ட், ஸ்டீஃபன் எஸ்கினாஸி, ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர், நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், லான்ஸ் மோரிஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் அடித்தார். ஜோர்டான் சில்க் அதிரடியாக ஆடி 34 பந்தில் 47 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 20 ஓவரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 151 ரன்கள் அடித்தது.

152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் பான்கிராஃப்ட் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். ஸ்டீஃபன்(4), ஆரோன் ஹார்டி(9), ஜோஷ் இங்லிஸ்(0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய பான்கிராஃப்ட்டுடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஷ்டான் டர்னர் அதிரடியாக பேட்டிங் ஆடினார். பான்கிராஃப்ட்டை தொடர்ந்து அஷ்டான் டர்னரும் அரைசதம் அடித்தார். அதன்பின்னரும் அடித்து ஆடிய டர்னர் 47 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 84 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அஷ்டான் டர்னர் டி20 கிரிக்கெட் கெரியரில் இதுதான் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ். இதுதான் டி20 கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோரும் ஆகும். 

ஜேசன் ராயின் அதிரடி சதம் வீண்.. சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி., மிடில் ஆர்டர்..! தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

அஷ்டான் டர்னர் 84 ரன்களையும், பான்கிராஃப்ட் 53 ரன்களையும் குவிக்க, 19வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்   அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

click me!