மீண்டும் ஐபிஎல்லில் கங்குலி: டெல்லி கேபிடல்ஸ் அணியில் கச்சிதமான போஸ்டிங்!

By Rsiva kumar  |  First Published Jan 3, 2023, 7:37 PM IST

வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரர் சௌரவ் கங்குலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அனியின் இயக்குநராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ பதவிக்காலம் முடிந்த நிலையில், பிசிசிஐக்கு 36ஆவது புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலி தற்போது ஐஎபில் பக்கம் திரும்பியுள்ளார். மீண்டும் டெல்லி அணியின் இயக்குநராக அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக கங்குலியுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பணியாற்றியபோது அவர் அணிக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சௌரவ் கங்குலி செயல்பட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். அதன் பிறகு 2011, 2012 ஆம் ஆண்டுகளில் புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக இருப்பது மட்டுமின்றி துபாய் கேபிடல்ஸ்-ன் ஐஎல்டி20 மற்றும் எஸ்ஏ20 லீக்கின் பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆகிய அணிகளின் செயல்பாட்டையும் அவர் மேற்பார்வையிடுவார் என்று சொல்லப்படுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரால் ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிகிறது. ஆகையால், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் அல்லது பிரித்வி ஷா அல்லது மணீஷ் பாண்டே ஆகியோரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.

ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

டெல்லி கேபிடல்ஸ் அணி:

ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மேன் பவால், சர்ப்ஃராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்‌ஷர் படேல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, சேட்டன் சக்காரியா, கமலேஷ் நாகர்கோட்டி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஷ்டாபிகுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஒஸ்ட்வால், இஷாந்த் சர்மா, பில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோஸவ்.

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

click me!