ஏன் முதல் டி20ல் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை? பிசிசிஐ விளக்கம்!

Published : Jan 03, 2023, 07:29 PM IST
ஏன் முதல் டி20ல் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை? பிசிசிஐ விளக்கம்!

சுருக்கம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறாதது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் டி20 போட்டியில் இன்று அறிமுகமாகின்றனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்கான தொப்பியை (Cap) ஷிவம் மாவிக்கு வழங்கினார். இதே போன்று இந்த டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில்லுக்கு, துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தொப்பி கொடுத்தார்.

ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

ஆனால், இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அவரது உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. ஆகையால், தான் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Note - Arshdeep Singh wasn't available for selection for the 1st T20I against Sri Lanka since he has still not fully recovered from his illness.#INDvSL

 

இந்திய அணி: 

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் கூடா, அக்‌ஷர் படேல், ஹர்ஷல் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சரித் அசலாங்கா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிண்டு ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, மஹீத் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்சன் மதுஷங்கா.

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!