
ஐபிஎல் 14வது சீசனின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. ஐபிஎல்லில் இதுவரை நடந்திராத வகையில், இன்று முதல் முறையாக ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடக்கின்றன. இதில் துபாயில் நடக்கும் போட்டியில் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸும் மோதுகின்றன.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகின்றன.
ஆர்சிபி அணி:
விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிப்பால் படேல், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்யா.