IPL 2021 வரலாற்று சாதனையை படைக்க எங்களுக்கு அருமையான வாய்ப்பு! SRHக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்த ரோஹித்

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 7:29 PM IST
Highlights

பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமென்றால், 171 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடுவதால், டாஸ் வென்ற மும்பை அணி வேறு வழியே இல்லாமல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. ஐபிஎல்லில் இதுவரை நடந்திராத வகையில், இன்று முதல் முறையாக ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடக்கின்றன. இதில் துபாயில் நடக்கும் போட்டியில் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸும் மோதுகின்றன.

சன்ரைசர்ஸ் அணி இந்த தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் 171 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முடியும். 

இது மிகவும் கடினமானது மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்பது தெரிந்தாலும், டாஸ் வென்ற ரோஹித் சர்மா, சிரித்துக்கொண்டே முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தார். சன்ரைசர்ஸை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும் கூட, மும்பை அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாது. நெட்ரன்ரேட்டில் அந்தளவிற்கு முன்னிலையில் உள்ளது கேகேஆர். 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேற முடியும்.

இந்த நிலையில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பேசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, நம்பர்கள் அச்சுறுத்தும் விதமாக உள்ளது(171 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்து). ஆனால் இதுவரை யாருமே செய்யாததை செய்து அபார சாதனை படைப்பதற்கான அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், ஆட்டத்தை லவ் பண்ணி ஆடுவது அவசியம் என்றார் ரோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சவுரப் திவாரிக்கு பதிலாக க்ருணல் பாண்டியாவும், ஜெயந்த் யாதவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஜிம்மி நீஷம், நேதன் குல்ட்டர்நைல், பியூஷ் சாவ்லா, பும்ரா, போல்ட்.

சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறிய காயம் காரணமாக ஆடவில்லை. புவனேஷ்வர் குமாரும் ஆடாததால் மனீஷ்  பாண்டே கேப்டன்சி செய்கிறார். முகமது நபி ஆடுகிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மனீஷ் பாண்டே(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், பிரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்.
 

click me!