திறமையில் சச்சின் டெண்டுல்கரை கோலி நெருங்கக்கூட முடியாது.! பாக்., முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 5:24 PM IST
Highlights

விராட் கோலி பேட்டிங் திறமையில் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
 

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடி அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் என பல்வேறு பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டு, தன்னிகரில்லா ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்.

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் என மொத்தம் 70 சதங்களை குவித்துவிட்டார். எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதும், இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க - ரோஹித், கோலியை விட இவர் தான் மிகத்திறமையான பேட்ஸ்மேன்.! இந்திய வீரருக்கு கம்பீர் புகழாரம்

அந்தவகையில் இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப், கோலி பாட்டம் ஹேண்ட் பிளேயர்(பேட்டின் கீழ்பகுதியில் பிடிக்கும் கை - வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை பாட்டம் ஹேண்ட்). கோலி சிறப்பாக ஆடுவதற்கு அவரது ஃபிட்னெஸே காரணம். அவர் சரிவை சந்திக்கும்போது, அதன்பின்னர் அதிலிருந்து அவரால் மீண்டெழவே முடியாது என நினைக்கிறேன். பாபர் அசாம் சச்சின் டெண்டுல்கரை போல அப்பர் ஹேண்ட் பிளேயர்(பேட்டை பிடித்திருக்கும் மேல் கையை அட்ஜஸ்ட் செய்து ஆடும் வீரர்). பாபர் அசாமின் பேட் மூவ்மெண்ட் சச்சினை போல நல்ல ஃப்ளோவில் இருக்கும். சச்சினை விட கோலி சிறந்தவர் என்று சிலர் கூறலாம். ஆனால் நான், இல்லை என்பேன். விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது என்பது என் கருத்து.

இதையும் படிங்க - எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் பாக்., அணியின் பயிற்சியாளராக மட்டும் ஆகமாட்டார் வாசிம் அக்ரம்.! இதுதான் காரணம்

சச்சின் டெண்டுல்கர் அப்பர் ஹேண்டை பயன்படுத்தி ஆடுவார். அந்த டெக்னிக்கை வெகுசிலரே அறிவார்கள். அதனால் தான் சச்சின் டெண்டுல்கர், கவர் டிரைவ், ஆன் டிரைவ், புல் ஷாட், கட் ஷாட் என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடுவார். கோலியிடமும் அனைத்துவிதமான ஷாட்டுகளும் உள்ளன. ஆனால் அவர் பாட்டம் ஹேண்ட் பிளேயர் என்று முகமது ஆசிஃப் கூறியுள்ளார்.
 

click me!