IPL 2021 ஐபிஎல் வரலாற்றில் இன்று முதல் முறையாக நடக்கும் சம்பவம்..! ஒரே சமயத்தில் 2 போட்டிகள்

Published : Oct 08, 2021, 03:37 PM IST
IPL 2021 ஐபிஎல் வரலாற்றில் இன்று முதல் முறையாக நடக்கும் சம்பவம்..! ஒரே சமயத்தில் 2 போட்டிகள்

சுருக்கம்

ஐபிஎல் வரலாற்றில் இன்று முதல்முறையாக ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடக்கின்றன.  

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டநிலையில், 4வது அணியாக கேகேஆர் தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது.

லீக் சுற்றில் கடைசி 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகிய 2 போட்டிகளும் இன்று நடக்கின்றன.

இந்த 2 போட்டிகளுமே இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கின்றன. ஐபிஎல்லில் ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. 2008லிருந்து ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டுவரும் நிலையில், ஒரே நாளில் 2 போட்டிகள் நடத்தப்படும். பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 7.30 மணிக்கு மற்றொரு போட்டியும் நடக்கும்.

ஆனால் முதல்முறையாக இன்று ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!