IPL 2021 வரலாற்று சாதனை படைத்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம்..! செய்யுமா மும்பை இந்தியன்ஸ்..?

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 2:50 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி, மும்பை இந்தியன்ஸின் கொஞ்ச நஞ்ச பிளே ஆஃப் ஆசையையும் தகர்த்தது.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவியது.

இரு அணிகளுமே 13 போட்டிகளின் முடிவில் 12 புள்ளிகளை பெற்ற நிலையில், கேகேஆர் அணியின் நெட் ரன்ரேட், மும்பை இந்தியன்ஸை விட அதிகமாக இருந்தது. எனவே இரு அணிகளின் கடைசி போட்டிகளும் அந்த அணிகளுக்கு மிக முக்கியம்.

கேகேஆர் அணி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்று, மும்பை அதன் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தினால் 14 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறமுடியும் என்றிருந்தது. அதனால் ராஜஸ்தான் ராயல்ஸிடம் கேகேஆர் தோற்க வேண்டும் என்று மும்பை நினைத்தது. கேகேஆர் அணி ராஜஸ்தானை ஜெயித்தால் கூட, சன்ரைசர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அபாரமான வெற்றியை பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் வாய்ப்பு மும்பை அணிக்கு இருந்தது.

இதையும் படிங்க - இந்தியா, இங்கிலாந்துலாம் வலுவான அணிகள் தான்! ஆனால் டி20 உலக கோப்பையில் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறது அந்த அணி தான்

ஆனால், கேகேஆர் அணி வேறு பிளான் வைத்திருந்திருக்கிறது. மும்பை அணி கடைசி போட்டியில் ஜெயித்தால் கூட, பிளே ஆஃபிற்கு வரும் வாய்ப்பு இருக்கக்கூடாது என்று நினைத்த கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்று, மும்பை அணியால்(-0.048) நினைத்துக்கூட பார்க்கமுடியாத நெட் ரன்ரேட்டை பெற்றது கேகேஆர்(+0.587).

மும்பை இந்தியன்ஸ் அணி இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதிபெற வேண்டுமென்றால், இன்று நடக்கும் அதன் கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி, சன்ரைசர்ஸை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். 2வதாக பேட்டிங் ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூட கேகேஆர் அணியின் நெட் ரன்ரேட்டை முந்தமுடியாது.

இதையும் படிங்க - பாகிஸ்தானுக்கு செய்ததை இங்கிலாந்தால் இந்தியாவிற்கு செய்யமுடியாது..! ஏன்னா அவங்க பவர்ஃபுல்.. ஹோல்டிங் விளாசல்

எனவே 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் வித்தியாச வெற்றியே, 146 ரன்கள் தான் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. எனவே மும்பை அணி வரலாற்று சாதனை படைத்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம். 171 ரன் வித்தியாசத்தில் வெற்றி என்பது சாத்தியமே இல்லாதது என்பதால், மும்பை அணி இனி பிளேஆஃபிற்கு முன்னேறுவது என்பது நடக்காத காரியம்.
 

click me!