இந்தியா, இங்கிலாந்துலாம் வலுவான அணிகள் தான்! ஆனால் டி20 உலக கோப்பையில் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறது அந்த அணி தான்

By karthikeyan VFirst Published Oct 6, 2021, 9:52 PM IST
Highlights

இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் வலுவான அணிகளாக இருந்தாலும், அந்த குறிப்பிட்ட தினத்தில் கிளிக் ஆகிவிட்டால், அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் அணி பாகிஸ்தான் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ஆனாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை உடைத்தெறிய இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளார் விராட் கோலி. ரோஹித், ராகுல், கோலி, ரிஷப், சூர்யகுமார் யாதவ் என இந்திய அணி அதிரடியான பேட்டிங் ஆர்டரையும், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, தீபக் சாஹர் என மிரட்டலான பவுலிங் யூனிட்டையும் பெற்று இந்திய அணி வலுவாக திகழ்கிறது.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவருகிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 2019ல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

பொல்லார்டு, கெய்ல், பிராவோ, ஆண்ட்ரே ரசல் என டி20 கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மிரட்டலான அதிரடி வீரர்களை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே டாப் கிளாஸ் அணி. பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களையும் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. எனவே டி20 உலக கோப்பையில் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என தங்களது ஆருடங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நல்ல பேலன்ஸான அணிகளாக இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி அபாயகரமான அணி. ஆனால் போட்டி நடக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் கிளிக் ஆகி, முமெண்டம் கிடைக்கும்பட்சத்தில், அனைவருக்கும் பெரிய சர்ப்ரைஸாக இருக்கப்போவது பாகிஸ்தான் அணி தான் என்று ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
 

click me!