பாகிஸ்தானுக்கு செய்ததை இங்கிலாந்தால் இந்தியாவிற்கு செய்யமுடியாது..! ஏன்னா அவங்க பவர்ஃபுல்.. ஹோல்டிங் விளாசல்

By karthikeyan VFirst Published Oct 6, 2021, 6:18 PM IST
Highlights

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்தால், அதையே இந்தியாவிடம் செய்துவிடமுடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்தது என்று மைக்கேல் ஹோல்டிங் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை செம விளாசு விளாசியுள்ளார்.
 

பாகிஸ்தான் அணி கடந்த பல ஆண்டுகளாகவே ஐக்கிய அரபு அமீரகத்தைத்தான் ஹோம் கிரவுண்டாக பாவித்து கிரிக்கெட் தொடர்களில் ஆடிவருகிறது. அண்மையில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வரத்தொடங்கின.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடவிருந்தன. இந்நிலையில் தான், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்தை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் அதே காரணத்தை காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இங்கிலாந்து அணியின் செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஷோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் என பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.

இங்கிலாந்து அணியின் செயலை மிகக்கடுமையாக கண்டித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங்.

இதுகுறித்து கருத்து  தெரிவித்த மைக்கேல் ஹோல்டிங், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தடுப்பூசி கூட வராத காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று முழு தொடரிலும் ஆடியது. இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் கொடுத்த மரியாதையை, இங்கிலாந்து திருப்பி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

இதே விஷயத்தை இந்தியாவுக்கு எதிராக செய்திருக்குமா இங்கிலாந்து..? செய்ய முடியாது. ஏனெனில் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியத்தை கொண்டது என்று இங்கிலாந்தின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் மைக்கேல் ஹோல்டிங்.
 

click me!