வலியால் துடிக்கும் இந்திய வீரர்..! டி20 உலக கோப்பையை நினைத்து கவலையில் பிசிசிஐ

By karthikeyan VFirst Published Oct 6, 2021, 6:04 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி முழங்கால் வலியால் அவதிப்படும் நிலையில், இது பிசிசிஐக்கு கவலையளித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக நடந்துவரும் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம், டி20 வீரர்களுக்கு உலக கோப்பைக்கு தயாராக வசதியாக அமைந்துள்ளது.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி கேகேஆர் அணிக்காக ஐபிஎல்லில் அருமையாக பந்துவீசி, எதிரணி வீரர்களை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தும் அதேவேளையில், விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். 

வருண் சக்கரவர்த்தி என்ன பந்து வீசப்போகிறார் என்பதை கணிக்கமுடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறிவருகின்றனர். எனவே அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலக கோப்பையில் எதிரணி வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று இந்திய அணியும் பிசிசிஐயும் மகிழ்ச்சியில் இருந்தது.

இதையும் படிங்க - ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்க, இதை செஞ்சே தீரணும்..! பிசிசிஐக்கு முன்னாள் வீரரின் கோரிக்கை

இந்நிலையில், அவர் முழங்கால் வலியால் அவதிப்படுவதாகவும், அதனால் இந்திய அணி நிர்வாகம் கவலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வருண் சக்கரவர்த்தி முழங்கால் வலியால் துடித்து வருகிறார். அவருக்கு வலிநீக்கிகள் கொடுத்து, அவரது ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி கேகேஆர் அணி ஐபிஎல்லில் ஆடவைத்துவருகிறது. டி20 உலக கோப்பையில் அவர் ஆடினால், அதன்பின்னர் 100 சதவிகித ஃபிட்னெஸை அடைய கொஞ்சம் பெரிய இடைவெளி எடுக்க வேண்டிவரும். இப்போதைக்கு அவரது வலியிலிருந்து அவரை விடுபட வைப்பதுதான் இப்போதைய நோக்கம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க - எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் பாக்., அணியின் பயிற்சியாளராக மட்டும் ஆகமாட்டார் வாசிம் அக்ரம்.! இதுதான் காரணம்
 

click me!