ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்க, இதை செஞ்சே தீரணும்..! பிசிசிஐக்கு முன்னாள் வீரரின் கோரிக்கை

By karthikeyan VFirst Published Oct 6, 2021, 5:06 PM IST
Highlights

ஐபிஎல்லில் அடுத்த சீசனிலிருந்து ஒவ்வொரு அணியும் 5 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தலா 4 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க இதுவரை அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில்(15வது சீசன்) கூடுதலாக 2 அணிகளை சேர்த்து 10 அணிகளை ஆடவைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இந்நிலையில், அடுத்த சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளதால், அனைத்து அணிகளும் சமபலத்துடன் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு அணியும் தலா 5 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் பாக்., அணியின் பயிற்சியாளராக மட்டும் ஆகமாட்டார் வாசிம் அக்ரம்.! இதுதான் காரணம்

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல்லில் அடுத்த சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளதால் ஒவ்வொரு அணியும் 5 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும். ஐபிஎல்லின் தரத்தை உயர்த்தவே நான் இதை கூறுகிறேன். ஐபிஎல் உலகின் வெற்றிகரமான டி20 லீக் தொடர். எனவே அனைத்து அணிகளுமே சமபலத்துடன் திகழ ஒவ்வொரு அணியிலும் 5 வெளிநாட்டு வீரர்களை ஆட அனுமதிக்க வேண்டும்.

இதையும் படிங்க - IPL 2021 #RCBvsSRH உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஏனெனில் சில அணிகள் தரமான உள்நாட்டு வீரர்களை பெற்றிருக்கின்றன. ஆனால் அனைத்து அணிகளும் அப்படி பெற்றிருக்கவில்லை. எனவே ஐபிஎல்லின் தரத்தை போற்றி காக்கும் வகையில், அனைத்து அணிகளும் சமபலத்துடன் திகழ வழிவகை செய்ய, 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கலாம்.  5 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்த நினைக்கும் அணி பயன்படுத்திக்கொள்ளட்டும்; பயன்படுத்த நினைக்காத அணிகள் இருந்துகொள்ளட்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!