IPL 2021 #RCBvsSRH உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 06, 2021, 02:47 PM IST
IPL 2021 #RCBvsSRH உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட ஆர்சிபி அணியும், பிளே ஆஃப் வாய்ப்பை எப்போதோ இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டி புள்ளி பட்டியலில்  எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இது முக்கியமான போட்டி அல்ல.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. பிளே ஆஃபிற்கு தயாராகும் விதமாக ஆர்சிபி அணி அதே ஆடும் லெவனைத்தான் தேர்வு செய்யும்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக். 
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்