#T20WorldCup இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது..! செலக்ட் பண்ண டீம் மேல நம்பிக்கை வைங்க - அகார்கர்

Published : Oct 05, 2021, 09:58 PM ISTUpdated : Oct 05, 2021, 10:03 PM IST
#T20WorldCup இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது..! செலக்ட் பண்ண டீம் மேல நம்பிக்கை வைங்க - அகார்கர்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.  

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகத்தில் அருமையாக ஆடிவருகின்றனர்.

ஆனால் அதேவேளையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாஹர் ஆகிய 3 மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகின்றனர். எனவே ஐபிஎல் பெர்ஃபாமன்ஸை வைத்து, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்யலாம் என சிலர் பேசுகின்றனர்.

இதையும் படிங்க - ஐபிஎல், டி20 உலக கோப்பையிலிருந்து முழுவதுமாக விலகிய சாம் கரன்..!

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. காயம் காரணமன்றி மாற்றம் எதுவும் செய்யக்கூடாது. டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் சரியான ஃபார்மில் இல்லை. அவர்களது சிறந்த ஆட்டத்தை ஐபிஎல்லில் வெளிப்படுத்தவில்லை.  ஆனால் ஃபார்முக்கு திரும்பி தன்னம்பிக்கையை பெற ஒரேயொரு இன்னிங்ஸ் போதும். 

இதையும் படிங்க - பாகிஸ்தான் அளவுக்கு திறமையான வீரர்கள் இல்லாததால் தான் இந்தியா எங்களோட கிரிக்கெட் ஆட பயப்படுறாங்க-அப்துல் ரசாக்

ஐபிஎல் முடிவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த 15 வீரர்கள் தான் சிறந்த வீரர்கள் என்று நினைத்து அணியில் எடுத்தால், அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை கைவிடாமல், அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து அவர்களையே ஆடவைக்க வேண்டும் என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி
ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!