IPL 2021 ராஜஸ்தான் அணியை 90 ரன்களுக்கு சுருட்டிய மும்பை அணி..! எத்தனாவது ஓவரில் ஜெயிக்கும் என்பதுதான் விஷயம்

Published : Oct 05, 2021, 09:50 PM IST
IPL 2021 ராஜஸ்தான் அணியை 90 ரன்களுக்கு சுருட்டிய மும்பை அணி..! எத்தனாவது ஓவரில் ஜெயிக்கும் என்பதுதான் விஷயம்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெறும் 90 ரன்களுக்கு சுருட்டி, 91 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.  

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு 4வது அணியாக முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் இன்று ஆடிவருகின்றன.

டாஸ் என்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு  செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால்(12), லூயிஸ்(24) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர், மற்ற வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

ஷார்ஜாவின் ஸ்லோவான பிட்ச்சில் தெளிவாக சாமர்த்தியமாக ஆடுவதை விடுத்து, அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடமுயன்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாம்சன்(3), துபே(3), ஃபிலிப்ஸ்(4), மில்லர்(15), டெவாட்டியா(12) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவரில் வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி.

91 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை அணி விரட்டிவருகிறது. இதை எவ்வளவு விரைவில் அடிக்கிறதோ, அந்தளவிற்கு மும்பை அணியின் நெட் ரன்ரேட் உயரும். மும்பை அணி வென்றுவிடும். ஆனால் எத்தனையாவது ஓவரில் ஜெயிக்கும் என்பதுதான் விஷயம்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!
yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?