IPL 2021 #RCBvsSRH டாஸ் வென்ற ஆர்சிபி ஃபீல்டிங் தேர்வு..!

Published : Oct 06, 2021, 07:34 PM IST
IPL 2021 #RCBvsSRH டாஸ் வென்ற ஆர்சிபி ஃபீல்டிங் தேர்வு..!

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.   

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட ஆர்சிபி அணியும், பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகின்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான்,  புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சாஹல். 
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்