ரோஹித், கோலியை விட இவர் தான் மிகத்திறமையான பேட்ஸ்மேன்.! இந்திய வீரருக்கு கம்பீர் புகழாரம்

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 5:18 PM IST
Highlights

ரோஹித் சர்மா, விராட் கோலியை விட கேஎல் ராகுல் தான் திறமையான பேட்ஸ்மேன் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். திறமையில் இவர்களுக்கு சற்றும் சளைத்திராத வீரர் கேஎல் ராகுல். கேஎல் ராகுல் அவரது இளம் வயதிலிருந்தே முன்னாள் ஜாம்பவான்கள் பலராலும் புகழப்பட்டுவருகிறார். அவரது பேட்டிங் திறமை சிறுவயதிலிருந்தே கவனிக்கப்பட்டுவருவதுடன், பாராட்டுகளையும் குவித்துவருகிறது.

ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஆன் டிரைவ், புல் ஷாட், ஹூக் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய அபார திறமைசாலி கேஎல் ராகுல். பல முறை தனது திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார் ராகுல்.

இதையும் படிங்க -  IPL 2021 வரலாற்று சாதனை படைத்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம்..! செய்யுமா மும்பை இந்தியன்ஸ்..?

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான பஞ்சாப் அணியின் கடைசி லீக் போட்டியில், அதை மீண்டும் செய்துகாட்டினார் ராகுல். பஞ்சாப் அணி சிஎஸ்கே நிர்ணயித்த இலக்கை 14 ஓவர்களில் அடித்து, கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அவற்றின் கடைசி போட்டிகளில் தோற்றால், பஞ்சாப்புக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருந்தது. அப்படியான சூழலில் சிஎஸ்கே நிர்ணயித்த 135 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, அதிரடியாகவும், அதேவேளையில் மிகத்தெளிவாகவும் நேர்த்தியாகவும் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடி 42 பந்தில் 98 ரன்களை குவித்து 13 ஓவரில் பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார் ராகுல்.

இந்நிலையில், ராகுலின் பேட்டிங்கை கண்டு மீண்டுமொருமுறை வியந்துபோன கௌதம் கம்பீர், ராகுலை வெகுவாக புகழ்ந்திருக்கிறார். 

இதையும் படிங்க -  பாகிஸ்தானுக்கு செய்ததை இங்கிலாந்தால் இந்தியாவிற்கு செய்யமுடியாது..! ஏன்னா அவங்க பவர்ஃபுல்.. ஹோல்டிங் விளாசல்

ராகுல் குறித்து பேசிய கம்பீர், இந்தளவிற்கு உங்களால்(ராகுல்) பேட்டிங் ஆடமுடியும் என்றால், ஏன் அப்படி ஆடுவதில்லை? ராகுலால் இந்தளவிற்கு பேட்டிங் ஆடமுடியும் என்றால், அவர் ரோஹித் மற்றும் கோலியை விட திறமையான பேட்ஸ்மேன். இந்த ஒரு இன்னிங்ஸை வைத்து மட்டும் நான் ராகுலை பற்றி இப்படி சொல்லவில்லை. பலவிதமான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. இந்தியாவில் மற்ற அனைத்து வீரர்களையும் விட அதிகமான ஷாட்டுகளை வைத்திருக்கிற வீரர்கேல் ராகுல் தான் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!