RR vs RCB:பிரசித் கிருஷ்ணா, மெக்காய் அபார பவுலிங்.. ரஜத் பட்டிதார் அரைசதம்.! RRக்கு எளிய இலக்கை நிர்ணயித்த RCB

Published : May 27, 2022, 09:38 PM ISTUpdated : May 27, 2022, 09:40 PM IST
RR vs RCB:பிரசித் கிருஷ்ணா, மெக்காய் அபார பவுலிங்.. ரஜத் பட்டிதார் அரைசதம்.! RRக்கு எளிய இலக்கை நிர்ணயித்த RCB

சுருக்கம்

2வது தகுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 157 ரன்கள் அடித்து 158 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறிவிட்ட நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி இடையேயான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் தோற்ற சஞ்சு சாம்சன், முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்றார்.

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் செம கெத்தாக களமிறங்கியுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் கோலி 7 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். கேப்டன் டுப்ளெசிஸும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 13 பந்தில் 24 ரன்கள் அடித்தார். எலிமினேட்டரில் கோலி, டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் சொதப்பியபோது, அபாரமாக ஆடி சதமடித்த ரஜத் பட்டிதார், இந்த போட்டியிலும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 58 ரன்கள் அடித்த பட்டிதாரை அஷ்வின் வீழ்த்தினார்.

லோம்ரார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற,பெரிய ஸ்கோரை நோக்கிச்சென்ற ஆர்சிபியை 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்காய் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

158 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!