RR vs RCB: நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன்..! செம கெத்தா களமிறங்கிய ராஜஸ்தான் - ஆர்சிபி

Published : May 27, 2022, 07:20 PM IST
RR vs RCB: நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன்..! செம கெத்தா களமிறங்கிய ராஜஸ்தான் - ஆர்சிபி

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான 2வது தகுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறிவிட்ட நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி இடையேயான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் தோற்ற சஞ்சு சாம்சன், முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்றார்.

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் செம கெத்தாக களமிறங்கியுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!