BAN vs SL: 2வது டெஸ்ட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

Published : May 27, 2022, 06:48 PM IST
BAN vs SL: 2வது டெஸ்ட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் சீனியர் வீரர்கள் முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். முஷ்ஃபிகுர் 175* ரன்களையும், லிட்டன் தாஸ் 141 ரன்களையும் குவிக்க, முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 506 ரன்களை குவித்தது. இலங்கை அணியின் சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் மற்றும் சண்டிமால் ஆகிய இருவரும் சதமடித்தனர். மேத்யூஸ் 145* ரன்களையும், சண்டிமால் 124 ரன்களையும் குவித்தனர். கேப்டன் கருணரத்னே 80 ரன்கள் அடித்தார்.

141 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(52) மற்றும் ஷகிப் அல் ஹசன்(58) ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி.

29 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களே அதை அடிக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 1-0 என தொடரை வென்றது. 
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!