ICC WTC: வங்கதேசம் - இலங்கை டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

Published : May 27, 2022, 09:04 PM IST
ICC WTC: வங்கதேசம் - இலங்கை டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

சுருக்கம்

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் கோப்பையை நியூசிலாந்து வென்றது. 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஃபைனலுக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

75 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 71.43 என்ற வெற்றி சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. 58.33 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 55.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் கடைசி 2 இடங்களில் உள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!