பெங்களூரு அணியின் கேப்டன் முதல் வீரராக 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. குஜராத், சென்னை, மும்பை மற்றும் லக்னோ ஆகிய 4 அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!
இன்று ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 60ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் டாஸ் வென்று பேட்டிங் ஆடினார். அதன்படி ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இதில், விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச்: முதல் அணியாக பிளே ஆஃப் செல்லுமா சென்னை?
பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய ஃபாப் டூப்ளெசிஸ் இந்தப் போட்டியில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார். மேலும், இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபாப் டூப்ளெசிஸ் இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதுவரையில் 631 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?
இதற்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஃபாப் டூப்ளெசிஸ் 16 போட்டிகள் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 6 அரைசதம் அடங்கும். கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக அவர் 16 போட்டிகளில் 468 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.