IPL 2023: ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்.. அனுஜ் ராவத் அதிரடி ஃபினிஷிங்..! RR-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது RCB

Published : May 14, 2023, 05:23 PM IST
IPL 2023: ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்.. அனுஜ் ராவத் அதிரடி ஃபினிஷிங்..! RR-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது RCB

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனின் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.   

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன.

ஜெய்ப்பூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல்லும், ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும் ஆடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎம் ஆசிஃப், சந்தீப் ஷர்மா, ஆடம் ஸாம்பா.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடிய கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால் இருவருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் டுப்ளெசிஸ் 55 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். லோம்ரோர்(1) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) சொதப்பினர்.

ஆனால் கடைசியில் அனுஜ் ராவத் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 11 பந்தில் 29 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் ஆர்சிபி அணி 171 ரன்கள் அடித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி