12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்‌ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!

By Rsiva kumar  |  First Published May 14, 2023, 5:10 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஷஃபாலி வர்மா தனது 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்சீட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 16.60 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த தேர்வில் நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் 87.33% ஆக உள்ளது.  கடந்த ஆண்டை 5.8% தேர்ச்சி சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச்: முதல் அணியாக பிளே ஆஃப் செல்லுமா சென்னை?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா தனது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் 80 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனது முடிவுகளில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் எனக்குப் பிடித்த பாடமான கிரிக்கெட்டுக்காக என்னால் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?

ஹரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஷஃபாலி வர்மா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அவர் இதுவரையில் 79 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அண்டர் 19 இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ஷஃபாலி வர்மா, இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே ஆஃப் வாய்ப்பு போச்சு: முதல் அணியாக வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ்!

 

 

click me!