ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், மிக மிக சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது இந்த சீசன். குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளன. ஆர்சிபி 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும், கேகேஆர் 12 போட்டிகளில் 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனவே பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு 8 அணிகளுக்கு இன்னும் உள்ளது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற 8 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேற போராடுவதால் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.
இன்று இரவு சென்னையில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும், ஹசரங்காவிற்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎம் ஆசிஃப், சந்தீப் ஷர்மா, ஆடம் ஸாம்பா.
IPL 2023: முக்கியமான போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.