#IPL2021 ஆர்சிபி அணியில் மற்றுமொரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்..!

Published : Apr 07, 2021, 03:39 PM IST
#IPL2021 ஆர்சிபி அணியில் மற்றுமொரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்..!

சுருக்கம்

ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியாகிவருகிறது.

கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா, டெல்லி கேபிடள்ஸ் வீரர் அக்ஸர் படேல், மும்பை வான்கடே மைதான ஊழியர்கள், ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல், சிஎஸ்கே அணியை சேர்ந்த சமூக ஊடக நிர்வாகி, பிராட்கேஸ்ட் டீமை சேர்ந்த 14 ஊழியர்கள் என தொடர்ச்சியாக ஐபிஎல் தொடர்பான பலருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது.

இந்நிலையில், ஆஸி.,யை சேர்ந்த ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரான டேனியல் சாம்ஸுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆர்சிபி அணி 9ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

எனவே ஆர்சிபி அணி சென்னையில் உள்ளது. சென்னையை அடைந்த டேனியல் சாம்ஸுக்கு கடந்த 3ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில், 7ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆர்சிபி அணியின் தேவ்தத் படிக்கல்லுக்கு ஏற்கனவே உறுதியான நிலையில், இப்போது டேனியல் சாம்ஸுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்து பலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!