#IPL2021 இவனுக்குலாம் இத்தனை கோடி தேவையா.? என்ன ஆடுறான்னு காசை வாரி இறைக்குறாய்ங்க? கம்பீர் கடும் அட்டாக்

By karthikeyan VFirst Published Apr 7, 2021, 2:56 PM IST
Highlights

ஐபிஎல்லில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் வீரரை ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு அணி, அதிகமான தொகையை கொடுத்து ஏலத்தில் வருவது குறித்து கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். கடந்த சீசனில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.

ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.  கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது.

மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சொதப்பினாலும் கூட, அவரை ஐபிஎல் அணிகள் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பியும் கூட, அதைவிட கூடுதல் தொகைக்கு(ரூ.14.25கோடி) ஏலம்போனார் மேக்ஸ்வெல்.

இந்நிலையில், மேக்ஸ்வெல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், ஐபிஎல்லில் 2014ம் ஆண்டு சீசனை தவிர வேறு ஒரு சீசனிலும் சரியாக ஆடிராத மேக்ஸ்வெல்லுக்கு இன்னும் கிராக்கி இருப்பதும், அவரை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுப்பதும் துரதிர்ஷ்டவசமானது. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் சரியாக ஆடுவதில்லை. அவர் சரியாக ஆடாததால் தான் அணிகள் அவரை கழட்டிவிடுகின்றன; அதனால் தான் நிறைய அணிகளில் அவர் ஆடியுள்ளார். 

ஐபிஎல் அணிகள் அவருக்கு சுதந்திரம் அளிக்கவில்லை; அதனால் தான் அவர் சரியாக ஆடவில்லை என்றெல்லாம் சொல்லவே முடியாது. ஏனெனில் அவர் ஆடிய அணிகளில் எல்லாமே அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல்லில் அவர் சரியாக ஆடாமல் ஒவ்வொரு சீசனிலும் ஏமாற்றமளிக்கும்போதிலும், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்வதால் அதிக தொகைக்கு அவரை அணிகள் எடுக்கின்றன.

இந்த சீசனில் கூட ஆர்சிபி அணி அவரை ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவர் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி அதிக தொகை கொடுத்து எடுத்துள்ளது. இந்த சீசனிலாவது நன்றாக ஆடுகிறாரா என்று பார்ப்போம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!