#RSAvsPAK தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி..! பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Apr 7, 2021, 2:26 PM IST
Highlights

ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் ஃபகர் ஜமான் ஆகிய இருவரும் ஆடிவருகின்றனர்.

டி காக், ரபாடா, நோர்க்யா ஆகிய தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்லில் ஆட இந்தியா சென்றுவிட்டதால், இந்த போட்டியில் அவர்கள் ஆடவில்லை.

தென்னாப்பிரிக்க அணி:

மார்க்ரம், ஜே மலான், ஜேஜே ஸ்னட்ஸ், டெம்பா பவுமா(கேப்டன்), கைல் வெரெய்ன், ஹென்ரிச் க்ளாசன்(விக்கெட் கீப்பர்), ஃபெலுக்வாயோ, கேஷவ் மஹராஜ், டுபாவிலன், பியூரன் ஹென்ரிக்ஸ், லூதோ சிபாம்லா.

பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது(விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரௌஃப்.
 

click me!