இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளை 3 ஓவரில் முடித்துக் கொடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடக்க வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஒரு கட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி காட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு பென் ஃபோக்ஸ் 126 பந்துகள் வரை பிடித்து 47 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஆலி ராபின்சன் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், ராபின்சன் 8 ரன்களில் எல்பிடபிள்யூ ஆன நிலையில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பில் பட்டது தெளிவாக தெரிந்தது.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராபின்சன் மற்றும் ரூட் இருவரும் 2ஆவது ஆட்டத்தை தொடங்கினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 245 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவற்கு இந்திய பவுலர்கள் கடுமையாக போராடினர். கடைசியாக ரான்பிசன் இன்றைய நாளில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்த நிலையில் ஜடேஜா பந்தில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த சோயிப் பஷீர் 0 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக 13ஆவது முறையாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். கடைசி 3 ஓவரில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.