ENG vs IND: 8 வருஷத்துக்கு முன்பே என் திறமையை அடையாளம் கண்டது ஆண்டர்சன் தான்! சதத்திற்கு பின் ஜடேஜா நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Jul 3, 2022, 3:37 PM IST
Highlights

2014ம் ஆண்டே தனது பேட்டிங் திறமையை அடையாளம் கண்டு அங்கீகரித்த ஆண்டர்சனை நினைவுகூர்ந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 98 ரன்களுக்கே கோலி, புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினாலும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து ஜடேஜா ஆடிய இன்னிங்ஸ் மிக முக்கியமானது.

இதையும் படிங்க - ENG vs IND: ஐபிஎல் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்வி.. நறுக்குனு பதிலளித்த ஜடேஜா

ரிஷப் பண்ட்டை தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களை குவித்து ஜடேஜா ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் - ஜடேஜாவின் சதங்கள் தான் இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவியது. கடைசி நேரத்தில் பும்ரா 31 ரன்கள் பங்களிப்பு செய்ய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்துவருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை எடுக்காமல் ஜடேஜாவிற்கு முன்னுரிமை கொடுத்து இந்திய அணி நிர்வாகம் ஆடவைத்ததற்கு அவரது பேட்டிங் தான் காரணம். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், அணிக்கு தேவைப்பட்ட முக்கியமான நேரத்தில் சதமடித்து அர்த்தம் சேர்த்தார்.

இதையும் படிங்க - அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்

2ம் நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, 2014ம் ஆண்டே தனக்குள் இருந்த பேட்டிங் திறமையை அடையாளம் கண்டு உலகிற்கு அறிவித்த ஆண்டர்சனை நினைவுகூர்ந்தார்.

2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜடேஜாவின் பேட்டிங் குறித்து பேசிய இங்கிலாந்து சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜா ஆரம்பத்தில் 8ம் வரிசையில் இறங்கினார். இப்போது 7ம் வரிசையில் ஆடுகிறார். ஒரு முமுமையான பேட்ஸ்மேனை போன்று பேட்டிங் ஆடுகிறார். அவருக்கு பந்துவீசுவது கடினமாக உள்ளது என்று 2014ம் ஆண்டு ஆண்டர்சன் கூறியிருந்தார்.

இப்போது எட்ஜ்பாஸ்டனில் இக்கட்டான சூழலில் சதமடித்து இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா, ஆண்டர்சன் குறித்து நினைவுகூர்ந்தார். இதுகுறித்து பேசிய ஜடேஜா, நாம் ஸ்கோர் செய்யும் நம்மை நல்ல பேட்ஸ்மேன் என்றுதான் சொல்வார்கள். நான் எப்போதுமே களத்தில் நிலைத்து நின்று, மறுமுனையில் நிற்கும் வீரருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடவேண்டும் என்றே நினைப்பேன். 2014ம் ஆண்டே ஆண்டர்சன் என்னுள் இருந்த பேட்டிங் திறமையை அடையாளம் கண்டது சிறப்பானது என்று ஜடேஜா கூறினார்.
 

click me!