ENG vs IND: ஐபிஎல் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்வி.. நறுக்குனு பதிலளித்த ஜடேஜா

By karthikeyan VFirst Published Jul 3, 2022, 2:50 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் சதமடித்த ஜடேஜாவிடம் ஐபிஎல் குறித்து ரிப்போர்ட்டர் எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலளித்தார் ஜடேஜா.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 98 ரன்களுக்கே கோலி, புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினாலும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து ஜடேஜா ஆடிய இன்னிங்ஸ் மிக முக்கியமானது.

இதையும் படிங்க - ஹூடா, சாம்சன், சூர்யகுமார் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் இந்தியா வெற்றி

ரிஷப் பண்ட்டை தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களை குவித்து ஜடேஜா ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் - ஜடேஜாவின் சதங்கள் தான் இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவியது. கடைசி நேரத்தில் பும்ரா 31 ரன்கள் பங்களிப்பு செய்ய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை பதிவு செய்து, இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவிய ஜடேஜா, 2ம் நாள் ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஐபிஎல்லில் கம்பேக் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

ரவீந்திர ஜடேஜாவுக்கு 2022 ஐபிஎல் படுமோசமான சீசனாக அமைந்தது. இந்த சீசனுக்கு முன் தோனி சிஎஸ்கே கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியதுடன், ஜடேஜாவின் ஆட்டத்தையும் அது பாதித்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜடேஜா சோபிக்கவில்லை. கேப்டன்சியில் சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. அதன்விளைவாக, சீசனின் பாதியிலேயே கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா.

அதனால் தான், இந்த டெஸ்ட்டில் சதமடித்ததும்,  ஐபிஎல் கம்பேக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, நடந்தது நடந்தது தான். ஐபிஎல்லை பற்றி நான் யோசிக்கவேயில்லை. இந்தியாவிற்காக ஆடும்போது முழுக்கவனமும் அதில் தான் இருக்கவேண்டும். இந்தியாவிற்காக ஆடும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது என்றார் ஜடேஜா.
 

click me!