இங்கிலாந்துக்கு புறப்பட தயாரானார் ஜடேஜா..! குவாரண்டினை தொடங்கினார்

Published : May 24, 2021, 09:36 PM IST
இங்கிலாந்துக்கு புறப்பட தயாரானார் ஜடேஜா..! குவாரண்டினை தொடங்கினார்

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இங்கிலாந்து செல்வதற்காக மும்பையில் குவாரண்டினை தொடங்கினார் ஜடேஜா.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது. அதற்காக இங்கிலாந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பாக, குவாரண்டினில் இருக்க வேண்டும். 

அந்தவகையில், கடந்த வாரமே ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், மயன்க் அகர்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பைக்கு சென்று குவாரண்டினில் இருந்துவருகின்றனர். முதல் நிறுத்தம் என்று பதிவிட்டு அந்த பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ஜடேஜா, இன்று மும்பை சென்று குவாரண்டினை தொடங்கியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் குவாரண்டினில் இருந்து, கொரோனா பரிசோதனைகளை முடித்து பயோ பபுளில் இருந்து முழு பாதுகாப்புடன் இங்கிலாந்து செல்ல வேண்டும். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: சிவம் துபேவின் அதிரடி வேஸ்ட்.. 4வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி
T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!